தென்காசி நவம்பர் 4 –

தென்காசி மாவட்டம் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி மாவட்டம் தனியாக பிரிந்ததிலிருந்து மாவட்ட கண்காணிப்பாளர்களாக 9 பேர் பணியாற்றிய நிலையில் இன்று இன்று காலை 10 மணிக்கு தென்காசி மாவட்டத்தின் பத்தாவது காவல் கண்காணிப்பாளராக மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார் அதற்கு முன்பாக காவல்துறையின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்டார்


பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். தென்காசி மாவட்டத்தில் கனிமவள கடத்தலுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் அரசு உடமையாக்கப்படும் கடத்தலில் ஈடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படுவர்.

குற்றங்களை தடுக்கும் வகையில் கிராமங்கள் தோறும் சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்படும் என்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க தனி கவனம் செலுத்தப்படும் சாலை விபத்துக்கள் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்

இந்நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் மட்டும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *