தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420

குண்டடம்,

திருப்பூர் மாவட்டம், குண்டடம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முல்லை நகர் பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நாலேகால் பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முல்லை நகர் பகுதியில் தாமோதரன் (30) என்பவர் தனது மனைவி மோகனப்பிரியா (29), மகன் தன்விக் தேவ் (4) ஆகியோருடன் வசித்து வருகிறார். தாமோதரன் மேட்டுக்கடை அருகே கூலி வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி மோகனப்பிரியா குண்டடம் அருகே உள்ள கனரா வங்கிக்குச் சென்றுள்ளார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், இன்று மதியம் சுமார் 12.30 மணியளவில் வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்து, ஒரு பவுன் செயின், அரை பவுன் செயின், அரை பவுன் மோதிரம், மூன்று அரை பவுன் கம்மல்கள் மற்றும் கால் பவுன் காயின் உள்ளிட்ட மொத்தம் நாலேகால் பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

வங்கிக்குச் சென்றுவிட்டு அருகில் உள்ள அம்மா வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் வீட்டிற்குத் திரும்பிய மோகனப்பிரியா, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து உறவினர்கள் மூலம் குண்டடம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில், குண்டடம் இன்ஸ்பெக்டர் விவேக் தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். வீட்டிற்குள் சென்று ஆய்வு செய்தபோது தங்க நகைகள் திருடு போனது தெரியவந்தது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தாமோதரன் மற்றும் அவரது மனைவி மோகனப்பிரியா அளித்த புகாரின் பேரில் குண்டடம் போலீசார் வழக்குப் பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகளைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *