தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 231 . கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் ரஞ்ஜீத் சிங் பொது மக்களிடமிருந்து 231. மனுக்களை பெற்றுக்கொண்டார்
இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டு மனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் 231 கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்துக்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்
இந்த கூட்டத்தில் மாற்று திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 14.490.மதிப்பிலான ஸ்மார்ட் போன்களை காது கேளாத மற்றும் பார்வையற்ற 20 மாற்றுத்திறனாளிகளுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கினார்
இதனைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் தலா ரூபாய் 5205. மதிப்பிலான தையல் மிஷின்கள் 5 நபர்களுக்கும் தலா ரூபாய் 8781. மதிப்பிலான தேய்ப்பு பெட்டிகள் 5 நபர்களுக்கும் வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வருவாய் அலுவலர் ப. ராஜகுமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட அபிதாஹனிப் இயக்குனர் தனித்துணை ஆட்சியர் சண்முகசுந்தரம் மாவட்ட வழங்கல் அலுவலர் மாரிசெல்வி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் சம்பூர்ணம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்து மாதவன் பொது உதவி ஆணையர் கலால் முத்துச்செல்வி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் பொதுமக்கள் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.