திடீர் சாலை மறியல் எம்எல்ஏ வரவில்லை மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவில்லை
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட மூன்றாவது வார்டு இந்த வார்டு ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டதாகும் அந்தப் பகுதி உள்ள பொதுமக்கள் தொடர்ந்து பல்வேறு அடிப்படை வசதிகள் கேட்டு வருகின்றனர் இந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி மாநகரில் பெய்த பண மழையின் காரணமாக மாநகராட்சிக்கு உட்பட்ட மூன்றாவது வார்டு பகுதியில் மழை நீர் மற்றும் பாதாள சாக்கடை கழிவுநீர் வீட்டிற்குள் வருகிறது
என்று ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சன்முகையாவுக்கு பகுதி பொதுமக்கள் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்த போது இன்று காலை 10 மணிக்கு நேரில் வருவதாக கூறினார் ஆனால் எம்.எல்.ஏ வரவில்லை அதுபோல மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது
இன்று கண்டிப்பாக சரி செய்யப்படும் என்று மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது ஆனால் மாநகராட்சி நிர்வாகமும் சரி செய்யவில்லை எம்எல்ஏவும் வரவில்லை இதனை அடுத்து இரவு 7 மணி அளவில் எட்டயபுரம் மெயின் ரோட்டில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் ஏழு வருடமாக நாங்கள் இதே பிரச்சனையை மாநகராட்சி நிர்வாகத்திடம் கூறி வருகிறோம் மாநகராட்சி நிர்வாகம் கண்டு கொள்ளவே இல்லை ஆகையால் வேறு வழி இல்லாமல் நாங்கள் இன்று இப்போது சாலை மறியலில் ஈடுபட்டு வருகிறோம் எங்கள் வீட்டுக்குள் கழிவு நீர் மழைநீர் பாதாள சாக்கடை நீர் வருவதால் பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்
வெளியே செல்ல முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது ஆகையால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காணும் வரை சாலை மறியலில் ஈடுபடுவோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்