ஈரோடு, நவம்பர் 5:
ஈரோடு மாவட்ட மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.100-க்கு 10 வகையான காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு’ விற்பனை இன்று (05.11.2026) தொடங்கப்பட்டது.
இவ்விற்பனையினை ஈரோடு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. கந்தசாமி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து, காய்கறிகள் தொகுப்பின் விற்பனையை பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஈரோடு மேற்கு சட்டமன்ற உறுப்பினர் திரு. கா.க. ஆனந்த் மோகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. கந்தராஜா, துணைப் பதிவாளர் (சிந்தாமணி) திரு. செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள், கூட்டுறவுத்துறை பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான காய்கறிகள் கிடைக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் மூலம் பொதுமக்கள் பயனடைவார்கள்