தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
குண்டடம்.
திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஒன்றியம், சூரியநல்லூர் கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக் காவலர்களைப் பாராட்டி கௌரவிக்கும் வகையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரவிந்த் ஈஸ்வரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, குண்டடம் We The Leaders அமைப்பின் முன்னிலையில், மகேஷ் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், சூரியநல்லூர் கிராம ஊராட்சியில் பணியாற்றும் 41 தூய்மைக் காவலர்களுக்கு இனிப்புகள் மற்றும் வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டன.
சமூகத்தின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிக்கவும் அயராது பணியாற்றி வரும் தூய்மைக் காவலர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
தூய்மைப் பணியாளர்களின் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் இந்த நிகழ்வு அப்பகுதி மக்களிடையே பாராட்டைப் பெற்றது.