தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள ரூ.200 மளிகைப் பொருட்கள் மற்றும் ரூ.100 காய்கறித் தொகுப்பு வழங்கும் திட்டத்தின் கீழ், தூத்துக்குடி மாவட்ட கூட்டுறவு பண்டகசாலையில் பொருட்கள் வாங்க பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர்.
காலை 6 மணி முதலே 500-க்கும் மேற்பட்ட பெண்கள் காத்திருந்த நிலையில், 200 பேருக்கு மட்டுமே டோக்கன் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால் பெண்கள் ஆவேசமடைந்தனர். பல மணி நேரம் காத்திருந்தும் பொருட்கள் கிடைக்காததால் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டதாகவும், அதிகாரிகள் தரக்குறைவாகப் பேசுவதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர்.
தூத்துக்குடியில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் உள்ள நிலையில், குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தொகுப்புகள் வழங்கப்படுவது ஏமாற்றமளிப்பதாகக் கூறிய பொதுமக்கள், அனைத்து ரேஷன் கடைகள் மூலமாகவும் ரேஷன் கார்டு அடிப்படையில் அனைவருக்கும் தொகுப்புகள் கிடைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.