கடலூர், நவம்பர் 5:

கடலூர் மாவட்டத்தில் ரூ.151.24 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ப. ராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் சி.பி. ஆதித்யா செந்தில்குமார், காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எல். இ. ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று (05.11.2026) தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையிலான அரசு, பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அரசு திட்டப் பணிகள் தரமாகவும், விரைவாகவும் நிறைவேற்றப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதை உறுதி செய்ய தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, பள்ளிகள், அரசு மருத்துவமனைகள், சமுதாயக் கூடங்கள், சமூகநீதி விடுதிகள் மற்றும் அரசு அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக கடலூர் மாவட்டத்தில் இன்று கீழ்க்கண்ட முடிவுற்ற பணிகள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டன.

  1. மஞ்சக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்.
  2. அழகியநத்தம் அரசு உயர்நிலைப் பள்ளியில் ரூ.47.12 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு கூடுதல் வகுப்பறைக் கட்டடங்கள்.
  3. ஆல்பேட்டை கே.டி.ஆர். நகரில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக் கூடம்.
  4. கடலூர் முதுநகர் சீமான்தோட்டம் நடுநிலைப் பள்ளியில் ரூ.27 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறைக் கட்டடம்.

இத்திட்டங்கள் மூலம் மாணவர்களுக்குத் தேவையான கல்வி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுவதுடன், பொதுமக்களுக்கான சமுதாயக் கூட வசதியும் மேம்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி துணை மேயர் பா. தாமரைச்செல்வன், மாநகராட்சி ஆணையாளர் கிஷன்குமார், பொதுப்பணித்துறை கட்டடப் பிரிவு செயற்பொறியாளர் கௌதமன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகாலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *