மனிதநேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து எட்டாவது ஆண்டாக கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள ஆதரவற்றோருக்கு பிரியாணி வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது…

கோவை மனித நேயம் பவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக ஆதரவற்றோர் மற்றும் சாலையோரம் வசிப்பவர்களுக்கு ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து தினமும் உணவு வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சமூக நலப் பணிகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்…

இந்நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை அரசு மருத்துவமனை முன்பாக உள்ள நோயாளிகள் ஆதரவற்றோர் உள்ளிட்ட பொது மக்களுக்கு பிரியாணி, வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

தொடர்ந்து எட்டாவது ஆண்டாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியில்,மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட்டின் நிறுவனத் தலைவர் கோவை சுலைமான் தலைமை தாங்கினார்..

இதில்,கவுரவ அழைப்பாளர்களாக தே.மு.தி.க.தகவல் தொழில் நுட்ப மாநில துணை செயலாளர் ஜனா சுலைமான்,கோவை மாவட்ட செல்போன் விற்பனையாளர்கள் சங்க தலைவர் மன்சூர் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்கள்,மற்றும் அரசு மருத்துவமனை வரும் நோயாளிகள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி,வாட்டர் பாட்டில் மற்றும் இனிப்புகளை வழங்கினர்..

இந்நிகழ்ச்சியில் மனித நேய பவுண்டேஷன் டிரஸ்ட் ஆலோசகர் ஜெம் சாதிக்,மற்றும் நிர்வாகிகள் உமர். தாஹிர். அப்லூ,அசார். சதாம்,அப்துல் சலாம் ஆகியோர் கலந்து கொண்டனர்..

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *