சுரண்டை:

தென்காசி மாவட்டம், சுரண்டை நகராட்சி, தீயணைப்பு நிலையம் அருகே உள்ள பஞ்சாயத்து காலணி தெருவில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அங்கன்வாடி மையம், அரசு துணை சுகாதார நிலையம் மற்றும் சமுதாய நலக்கூடம் ஆகியவை அமைந்துள்ளன.

இந்நிலையில், இத்தெருவின் சாலையின் நடுவே இரண்டு மின்கம்பங்களும், மினி டிரான்ஸ்பார்மரும் அமைந்துள்ளதால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும், மின்கம்பங்கள் துருப்பிடித்து பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் மின்சாரம் பாய்ந்து ஷாக் ஏற்படுவதாகவும் அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

சாலையின் நடுவே மின்கம்பங்கள் இருப்பதால் வாகனங்கள் செல்வதற்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. குறிப்பாக, அவசர காலங்களில் நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆட்டோகூட தெருவுக்குள் செல்ல முடியாத அவலநிலை நிலவுகிறது.

எனவே, பொதுமக்களின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ள இந்த மின்கம்பங்களையும், மினி டிரான்ஸ்பார்மரையும் உரிய பாதுகாப்புடன் வேறு இடத்திற்கு மாற்றி அமைக்க நகராட்சி நிர்வாகமும், மின்வாரிய அதிகாரிகளும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *