அரியலூர் தமிழ் பண்பாட்டு பேரமைப்பு ஆட்சி மன்ற குழு கூட்டம் அரியலூர் ஏகே எம் ஐ ஏ எஸ் அகாடமி வளாகத்தில் நடந்தது பெரியவர் நிறுவனர் அய்யா செம்மொழி ராமசாமி அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடந்த ஆட்சி மன்ற குழு கூட்டத்திற்கு பேரமைப்பு தலைவர் சீனி பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்

செயலாளர் முனைவர் கதிர் கணேசன் அனைவரையும் வரவேற்று பேசினார் அமைப்புச் செயலாளர் ஆசிரியர் அரியலூர் நல்லப்பன் சங்கத்தின் நடப்புகள் குறித்து விளக்கி பேசினார் நிதிநிலை குறித்து பொருளாளர் கொவி புகழேந்தி பேசினார் புலவர் இளங்கோ முன்னிலை வகித்தார் ஜெயங்கொண்டம் புலவர் பன்னீர்செல்வம் சங்க துணைத் தலைவர் அன்புசித்திரன் நிர்வாக குழு உறுப்பினர் பொறியாளர் அறிவானந்தம் செயலாளர் ஜோதிராமலிங்கம் புலவர் அரங்கநாடன் ஜெயங்கொண்டம் பரஞ்சோதி துணை செயலாளர் ஆசிரியை மங்கையர்க்கரசி எழுத்தாளர் ராஜா ராம் கேவி முகமது ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்

ஜெயங்கொண்டத்தில் விரைவில் நடைபெற உள்ள தமிழ் பண்பாட்டு தமிழ் பண்பாட்டு பேரமைப்பின் பதினோராம் ஆண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவது ஆசிரியர் பன்னீர்செல்வம் எழுதிய தூண்டலும் துலங்கலும் நூல் அறிமுக விழா அகவை 97 நிறைவு செய்த அய்யா முத்துக்குமரனார் அவர்களுக்கு பாராட்டு விழா ஆகிய முப்பெரும் விழாக்களை ஜெயங்கொண்டத்தில் சிறப்பாக கொண்டாடுவது இதில் சிறப்பு அழைப்பாளர்களாக இந்திய வருவாய்த்துறை திரு க பாலமுருகன் சென்னை தலைநகர் தமிழ் சங்கம் தலைவர் முகிலை ராஜபண்டியன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ள செய்வது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ஆசிரியர் அரியலூர் அ நல்லப்பன் தீர்மானங்களை படித்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *