சுரண்டை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை, பெங்களூருக்கு தீபாவளி விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பெண்கள், மாணவிகள் அவதி ரெகுலர் பஸ்களும் வேறு வழித்தடத்தில் சென்றதால் சிரமமடைந்தனர்


தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கானோர் சென்னை, கோவை, திருப்பூர், பெங்களூர் உள்ளிட்ட பல பகுதிகள் வசித்து வருகின்றனர் அவர்கள் முக்கிய பண்டிகையான தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தசரா பண்டிகைகளை கொண்டாடிட கடந்த 15 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருநெல்வேலி பேரூந்துகள் சுரண்டை – சென்னை, மற்றும் சுரண்டை – கோவை , சுரண்டை – திருப்பூர் இடையே இயக்கப்பட்டு வந்தது.


அதே போன்று இந்த வருடமும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை கொண்டாட மேற்கண்ட சென்னை, கோவை, பெங்களூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்தும் பண்டிகை முடித்து திரும்பி செல்ல சுரண்டையில் இருந்தும் சிறப்பு பஸ்களை இயக்கி அதனை ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சேர்க்க சுமார் ஒரு மாதத்திற்கு முன்பே சமூக ஆர்வலர்களும், அரசியல் பிரமுகர்களும், தென்காசி எம்எல்ஏ டாக்டர் கலை கதிரவனும் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர்.


ஆனால் சுரண்டை பகுதி மக்களின் வேண்டுகோளை நிறைவேற்ற அரசு போக்குவரத்து கழக நிர்வாகம் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை மாறாக சமூக ஆர்வலர்கள் கோரிக்கைக்கு தொடர் விடுமுறையின் காரணமாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு ஏற்றார்போல் மாவட்டத்தின் முக்கிய இடமான தென்காசி மற்றும் சங்கரன்கோவில் ஆகிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் மாநிலத்தின் பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இவ்வாறாக மனுதாரர் கோரும் வழித்தடத்தில் பகுதி வாரியாக பேருந்து வசதி உள்ளது என்பது தெரிவிக்கப்படுகிறது. என தெரிவித்துள்ளனர்.

இதன்படி சுரண்டை பகுதி பயணிகள் சென்னை, கோவை, திருப்பூர், மற்றும் பெங்களூர் செல்ல திருநெல்வேலி, சங்கரன்கோவில், தென்காசி போன்ற ஊர்களுக்கு சென்று சம்பந்தப்பட்ட ஊர்களுக்கு செல்ல அறிவுறுத்தியுள்ளனர்.


ஆனால் கடந்த வியாழக்கிழமை முதலே சுரண்டையில் இருந்து திருநெல்வேலி, சங்கரன்கோவில் போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் புதிய பேரூந்துகள் சிறப்பு பஸ்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளது இதனால் சுரண்டையில் இருந்து திருநெல்வேலி, தென்காசி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளுக்கும் போதிய பஸ்கள் இயக்கப்படவில்லை என பயணிகள் குறை கூறினர்
ஏற்கனவே சுரண்டையில் இருந்து தினசரி இயக்கப்பட்டு வந்த அரசு விரைவு பஸ்கள் நிறுத்தம் செய்யபட்டு அதிகமான தனியார் ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்பட்டு வருகிறது

தற்போது தீபாவளி விடுமுறைக்கு சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கு தலா 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் கூடுதல் கட்டணத்தில் இயக்கப்பட்டன இதனால் நடுத்தர மற்றும் சாமானிய மக்கள் பெண்கள், முதியோர், மாணவிகள் கடுமையான சிரமங்களை அடைந்தனர்


முந்தைய ஆண்டுகளில் தீபாவளி, பொங்கல், புத்தாண்டு, தசரா மற்றும் பண்டிகை கால சிறப்பு பேரூந்துகள் குறைந்தது 10 தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டு இலவச முன்பதிவு செய்யப்பட்டு 200 பேர்களுக்கும் அதிகமான பயணிகள் பயன்பெற்று வந்த நிலையில் இந்த வருடம் சிறப்பு பஸ்கள் இயக்காத நிலையில் சுரண்டையில் இருந்து ரெகுலராக இயக்கபட்ட பேரூந்துகள் பிற இடங்களுக்கு திருப்பி விடப்பட்டது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.


ஆகவே வரும் நாட்களில் பண்டிகை மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சென்னை, கோவை, பெங்களூர், திருப்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து சுரண்டைக்கும் சுரண்டையில் இருந்து மேற்கண்ட பகுதிகளுக்கும் 15 தினங்களுக்கு முன்பே பேரூந்துகளை ஒதுக்கி ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சேர்த்து சிறந்த சேவையை வழங்க வேண்டும் என இப்பகுதி பயணிகள் குறிப்பாக பெண்கள் எதிர்பார்க்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *