கல்பாக்கம், நவ. 10:
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், நெற்குணப்பட்டு கிராமத்தில் அமைந்துள்ள செயின்ட் தாமஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தலைவர் அருட்சகோதரி ஜோசபின் செல்வி கடந்த 5ஆம் தேதி பள்ளிக்கு வருகை தந்தார்.
அவருக்கு பள்ளியின் தாளாளர் சுஜி, முதல்வர் ஜான்சி ராணி, ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் இணைந்து சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து மாணவ, மாணவியரின் நடன நிகழ்ச்சிகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
மேலும், பள்ளியில் சிறப்பாகப் பணியாற்றிய ஆசிரியர்களுக்குப் பரிசுகள் வழங்கி பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.