திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புத்தக கண்காட்சியில் ‘திருக்குறளின் மேன்மை’ என்ற தலைப்பில் சிறப்பு உரையரங்கம் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு அறம் பதிப்பகம் அமரேசன் தலைமை தாங்கினார். வந்தை வட்ட கோட்டை தமிழ்ச் சங்க செயலாளர் பா. சீனிவாசன் முன்னிலை வகித்தார். வீனஸ் வித்யாலயா பள்ளி தாளாளர் ரமேஷ் கண்ணா வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக, திருவண்ணாமலை திருக்குறள் தொண்டு மைய நிறுவனர் பாவலர் ப.குப்பன் பங்கேற்று, திருக்குறளின் மேன்மை பற்றியும், திருக்குறளை மாணவர்கள் தொடர்ந்து மனனம் செய்து படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. மேலும் பள்ளிகளில் திருக்குறளுக்கு என்று தனி பாடவேளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டது. இந்த நிகழ்வில் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் பெ.பார்த்திபன் வாழ்த்துரை வழங்கினார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க துணைத் தலைவர் கவிஞர் தமிழ்ராசா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கு புத்தக பரிசுகள் வழங்கப்பட்டது. இறுதியில் ஆசிரியர் மஹாவீர் நன்றி கூறினார்.

செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed