தஞ்சாவூர் மாவட்ட செய்தியாளர்.
ஜோ. லியோ யாக்கோப் ராஜ்.

தஞ்சாவூர், நவ- 11. காவிரி உரிமை மீட்புக் குழு கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பெ.மணியரசன் தலைமையில் நடைப் பெற்றது. தா.மணிமொழியன், பொருளாளர் சாமி.கரிகாலன் ஆகியோர் முன்னிலை வசித்தனர்.


கூட்டத்தில் கூட்டறிக்கை மற்றும் தீர்மானங்களாக:-
உழவர் எழுச்சிப் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் பேரணி நடத்துவதெனவும்.
தமிழ்நாட்டிற்குக் காவிரி நீர் உரிமை மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், கர்நாடக அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும். இந்திய கர்நாடக அரசுகளைக் கண்டிக்காமல் வேடிக்கைப் பார்க்கும் தமிழ்நாடு அரசு மற்றும் அரசியல் கட்சிகளைக் கண்டித்தும் திருக்காட்டுப்பள்ளியில் வருகிற நவம்பர் 26-ம் தேதி உழவர் எழுச்சிப் பேரணி மற்றும் கண்டன பொதுக்கூட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

த.வெ.க அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதியின் படி அனைத்து உழவர்களுக்கும் கூட்டுறவு பயிர்க் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும். பட்டா உள்ளவர்களுக்கு மட்டுமே பயிர் காப்பீடு என்ற நிபந்தனையைத் தளர்த்தி அனைத்து உழவர்களுக்கும் சம்பா பருவ பயிர் காப்பீடு செய்யும் வகையில் ஆணையிட வேண்டும். பயிர் காப்பீட்டுக்கான காலக்கெடுவை டிசம்பர் 15 வரை நீட்டிக்க வேண்டும். காவிரியில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத் தராத தமிழ்நாடு அரசு, வறட்சியைக் கருத்தில் கொண்டு இந்த வருட பயிர் காப்பீட்டுக்கான சந்தா தொகையை அரசே ஏற்க வேண்டும். காவிரி நீர் கிடைக்காததால் ஏற்பட்டுள்ள வேளாண் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டை வறட்சி மாநிலமாக அறிவித்து பாதிக்கப்பட்ட உழவர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூபாய் 35,000/- வறட்சி நிவாரணமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பொறியாளர் தி.செந்தில்வேலன், தமிழர் தேசியக்களம் மன்னை இராசசேகர், நா.வைகறை, பழ.இராசேந்திரன், குடந்தை க.விடுதலைச்சுடர், திருச்சி வே.க.இலக்குவன், மூ.த.கவித்துவன், வெள்ளாம் பெரம்பூர் துரை.இரமேஷ், பி.தென்னவன், க.காமராசு, லெ.இராமசாமி, இராசு.முணியாண்டி, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை வாசுதேவன், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இரா.செயக்குமார், வள்ளலார் பணியகம்-தலைவர் சுந்தர ராசன், வள்ளலார் பணியகம்-பொருளாளர் தியாகராசன், மா.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed