துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் தொகுதிவாசியை தாக்கிய துணை சபாநாயகரை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தீபாவளி அன்று (நவ-08) துணை சபாநாயகர் ரவிசங்கரை பூனாம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்திக்க சென்ற துறையூரை சேர்ந்த கார்த்திக்குமார் என்பவரை துணை சபாநாயகர் தாக்கும் வீடியோ ஒன்று வைரலானது.அதை தொடர்ந்து அவருடன் துணை சபாநாயகர் அமர்ந்து எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை,அதை யாரும் நம்ப வேண்டாம் என்று பேசிய வீடியோவும் வைரலானது.

மறுநாள் காலையில் பாதிக்கப்பட்ட நபர் தன்னை மிரட்டி தான் துணை சபாநாயகர் பேட்டி அளிக்க வைத்தார் என கூறியதை தொடர்ந்து துணை சபாநாயகருக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக வலைதளங்களிலும் கண்டனங்கள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து துறையூர் திமுக சார்பில் கோரிக்கை மனு கொடுக்க வந்த துறையூர் தொகுதியை சேர்ந்த நபரை தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கர் பதவி விலக வேண்டும் என்று கண்டித்து பேருந்து நிலையம் அண்ணா சிலை முன்பாக திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் தர்மன் ராஜேந்திரன்,முன்னாள் எம்எல்ஏ ஸ்டாலின்குமார், துறையூர் நகர செயலாளர் மெடிக்கல் முரளி,ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, வீரபத்திரன், சிவ சரவணன், முத்துச்செல்வன், அசோகன், உப்பிலியபுரம் பேரூர் கழக செயலாளர்கள் நடராஜன், பாலகிருஷ்ணம்பட்டி வெள்ளையன், நகர் மன்ற தலைவர் செல்வராணி, முன்னாள் ஒன்றிய சேர்மன் சரண்யாமோகன்தாஸ், மாவட்டக் கலை இலக்கிய பேரவை தலைவர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *