மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 12 மாதங்களும் திருவிழா நடைபெறும். இதில் மீனாட்சி அம்மனுக்கு என்று தனியாக ஆடி முளைக்கொட்டு, புரட்டாசி மாத நவராத்திரி விழா, ஐப்பசி கோலாட்ட உற்சவ விழா போன்று நடைபெறும் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்தவை. இந்த ஆண்டு ஐப்பசி மாத கோலாட்ட உற்சவம் துவங்கி நாளை 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.
திருவிழாவில் தினமும் மாலை 6 மணிக்கு மேல் மீனாட்சி அம்மன் கோலாட்ட அலங்காரத்தில் எழுந்தருளி 4 ஆடி வீதி களில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அப்போது பெண்கள் அம்மனுக்கு முன்பு கோலாட்டம் ஆடியபடி வழிபாடு செய்வார்கள். விழாவில் 14-ம் தேதி வெள்ளி கோரதத்தில் மீனாட்சி அம்மன் பவனி வருவார். 15-ம் தேதி மீனாட்சி அம்மன், சுந்தரேஸ்வரருடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.