நாகப்பட்டினம்,
நாகை மாவட்டம் திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகம் சார்பில் கட்டுமாவடி ஊராட்சியில் விளைநிலம் காப்போம் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார ஆத்மா குழு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.

கட்டுமாவடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மசுந்தரி கலியபெருமாள் முன்னிலை வகித்தார். வட்டார துணை தோட்டக்கலை அலுவலர் செல்லபாண்டியன் நிலங்களின் சத்துக்களுக்கு ஏற்றவாறு உர பரிந்துரை, யூரியா, டி.ஏ.பி அதிகமாக பயன்படுத்துவதால் நிலத்திற்கு ஏற்படும் தீமைகளை விளக்கினர்.

மேலும், உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்கள், தொழு உரங்கள் பயன்பாடுகளை அதிகரிப்பதன் மூலம் மண்ணில் பேரூட்டம் மற்றும் நுண்ணுாட்ட சத்துக்கள் மேம்பாடு மற்றும் மண்ணிற்கு உரமிடும்போது மண்வள அட்டையில் பரிந்துரைத்த உர பரிந்துரைகளை மேற்கொள்ள அறிவுருத்தினர். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் செந்தில்குமார் மத்திய, மாநில திட்டங்கள் குறித்து விளக்கினர். இதில் கட்டுமாவடி ஊராட்சி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நாகை தாலுக்கா செய்தியாளர், T. சரவணன் 9944852082

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *