கடலூர் மாவட்டம், பண்ருட்டியில் கொள்ளை, திருட்டு என 4வழக்குகளில் தொடர்புடைய விஜி (எ) குஞ்சால் விஜயசந்திரா (46), ஆந்திரா – சித்தூர், நகரி, காவெட்டாபுரம் என்பவர் பிணையில் வெளியே வந்த பின் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் 8 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தார். அவர் மீது என்பிடபுள்யு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
பண்ருட்டி போலீசார் தீவிர தேடுதலுக்கு பின் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.இதையடுத்து, சிறப்பாக செயல்பட்ட பண்ருட்டி போலீசாரை மாவட்ட எஸ்பி விவேகானந்த சுக்லா நேரில் அழைத்து பாராட்டி, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார்.