கோவை அவினாசி சாலையில் நவீன மருத்துவத் தொழில்நுட்ப வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ள ‘கிரியேட் (KREATE IVF)’ கருத்தரிப்பு மற்றும் மகளிர் நலன் மருத்துவ மையம் புதிதாகத் தொடங்கப்பட்டது.
இதன் திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி அண்ணாமலை, புதிய மருத்துவ மையத்தைத் திறந்து வைத்து வாழ்த்தினார்.
இந்த மருத்துவ மையத்தின் நிர்வாக இயக்குநரும், கருத்தரிப்பு மருத்துவத் துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவருமான மருத்துவர் ஜனனி ரமனேஷ், மருத்துவமனையின் சிறப்பு வசதிகள் மற்றும் சிகிச்சை முறைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், குழந்தையின்மைப் பிரச்சினையால் மனதளவிலும், உடலளவிலும் பாதிக்கப்படும் தம்பதிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில், நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களுடன் இந்த மையம் உருவாக்கப்பட்டுள்ளது. கருத்தரிப்பு தொடர்பான பல்வேறு பிரச்சினைகளுக்கு தகுந்த மருத்துவப் பரிசோதனைகள் மூலம் காரணங்களைக் கண்டறிந்து, ஒவ்வொரு தம்பதியரின் உடல்நிலை மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தனிப்பட்ட சிகிச்சைத் திட்டங்கள் வழங்கப்படும்.
மேலும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைகள் உள்ளிட்ட நவீன மருத்துவ முறைகள், மகளிர் நலன் சார்ந்த ஆலோசனைகள் மற்றும் சிகிச்சைகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் மருத்துவ மையம் வடிவமைக்கப்பட்டுள்ளது.சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருத்துவ வசதிகள் மட்டுமின்றி, அவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொண்டு அக்கறையுடனும், தனிப்பட்ட கவனத்துடனும் சிகிச்சை அளிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
கருத்தரிப்பு சிகிச்சையை நாடும் தம்பதியருக்கு நம்பிக்கையான சூழலை உருவாக்கி, தரமான மருத்துவச் சேவையை வழங்குவதே இந்த மையத்தின் முக்கிய நோக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
விழாவில்,மருத்துவமனையின் நிர்வாகி ரமனேஷ் வரதன் மற்றும் மருத்துவத் துறையினர், முக்கியப் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.