கோவை கணபதி பகுதியைச் சேர்ந்த 41 வயதான அறிவுமணி வசந்தகுமார், பாலாசனம் எனப்படும் குழந்தை ஆசனத்தை தொடர்ந்து ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் 2 விநாடிகள் மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.

மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்த அறிவுமணி கடந்த கொரோனா கால கட்டத்தில் மன அழுத்தத்தை குறைக்க யோகா செய்யத்துவங்கி உள்ளார்..யோகா செய்வதால் உடல் ஆரோக்கியத்தோடு மனதுக்கும் அமைதியை தருவதை உணர்ந்த அவர்,யோகாவை படிப்படியாக கற்று தற்போது முழுநேர யோகா பயிற்சியாளராக மாறி உள்ளார்..

இந்நிலையில் யோகாவின் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆசனத்தில் குழந்தை போஸ் என கூறப்படும் பாலாசனத்தை தொடர்ந்து ஒரு மணி நேரம் 41 நிமிடங்கள் 2 விநாடிகள் செய்து கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்…

இந்நிலையில் இவரது சாதனையை பாராட்டும் விதமாக யோவா உலக சாதனை புத்தகம் மற்றும் ஆசம் உலக சாதனை புத்தகம் ஆகிய இரு நிறுவனங்களும் அறிவுமணி வசந்தகுமாருக்கு கவுரவ சாரனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளனர்..

இதற்கான நிகழ்ச்சி கணபதி ஜெம் நிர்மாலயம் வளாகத்தில் நடைபெற்றது..
யோவா யோகா அகாடமியின் நிறுவனர் சரவணக்குமார் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற விழாவில்,யோவா உலக சாதனை புத்தகத்தின் நடுவர் சுரேஷ் மற்றும் யோகா பயிற்சியாளர் ரவி ஆகியோர் அறிவுமணி வசந்தகுமாருக்கு உலக சாதனை பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தனர்…

இந்நிகழ்ச்சியில் அறிவுமணியின் கணவர் வசந்தகுமார் மற்றும் மகள்,மகன் உட்பட குடும்பத்தினர், உறவினர்கள்,நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர் இதுகுறித்து அறிவுமணி வசந்தகுமார் கூறுகையில், ஆரம்பத்தில் தனது மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக யோகாசனப் பயிற்சியைத் தொடங்கியதாகவும், அதன் மூலம் யோகாவின் முக்கியத்துவத்தையும் நன்மைகளையும் உணர்ந்து, படிப்படியாக அதில் அதிக ஆர்வம் ஏற்பட்டு தற்போது முழுநேர யோகா பயிற்சியாளராக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாலாசனம் என்பது பார்ப்பதற்கு எளிதாகத் தோன்றினாலும், ஒரே நிலையில் நீண்ட நேரம் தொடர்ந்து இருப்பதற்கு உடல் கட்டுப்பாடு, மன ஒருமைப்பாடு மற்றும் சீரான சுவாசப் பயிற்சி அவசியம் என அவர் தெரிவித்தார்..

41 வயதிலும் மனம் தளராமல் யோகாவில் சாதனை செய்த அறிவு மணியின் சாதனையை பலரும் பாராட்டி, வருகின்றனர்…

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *