நாகப்பட்டினம்,நவ.17-
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் லெனின் தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் பாரதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகையன், சி.ஐ.டி.யூ மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி நிர்வாகத்திற்கு வர வேண்டிய நிதியை முடக்கு வைத்துள்ள மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
இதில் விவசாய சங்க மாவட்ட பொருளாளர் மார்க்ஸ், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் பொன்மணி, ஒன்றியக்குழு உறுப்பினர் திருமுருகன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க நிர்வாகி பசலை உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.