கோவையில் நவம்பர் 23-ம் தேதி விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் 4-வது மத்திய கவுன்சில் கூட்டம் – நிர்வாகிகள் தகவல்…
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியின் மகளிர் பிரிவான விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் 4-வது மத்திய கவுன்சில் கூட்டம், வரும் நவம்பர் 23-ம் தேதி கோவையில் நடைபெற உள்ளது.
கோவை ஆயிஷா மஹால் அரங்கத்தில் நடைபெறவுள்ள இக்கூட்டம் தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு, கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் நிர்வாகிகள் கலந்து கொண்டு, மத்திய கவுன்சில் கூட்டம் குறித்த விவரங்களை செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.
இந்த மத்திய கவுன்சில் கூட்டத்தில், பெண்களின் முன்னேற்றம், பெண்களின் உரிமைகள் மற்றும் சமூகத்தில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.மேலும், விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் எதிர்கால செயல்பாடுகள், அமைப்பின் வளர்ச்சி, அடுத்தகட்ட செயல்திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இதில் அமைப்பின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மத்திய கவுன்சில் உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.