மதுரை தமுக்கம் மைதா னத்தில் புத்தக திருவிழா தொடங்கியது.
மதுரை மாவட்ட நிர்வாகம் ம் மற்றும் பொது நூலக இயக்கம் சார்பில் தென்னிந்திய புத்தகம் விற்பனையாளர் மற்றும் பதிப் பாளர் சங்கத்தின் சார்பில் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது. இதன் தொடக்க விழா மதுரை தமுக்கம் மைதானத்தில் நடந்தது.

மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயப்பிரித்தா வவேற்றார். பொதுநூலகத்துறை இயக்குனர் ஷஜீவனா அறிமுக உரையாற்றினார்.
கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தலைமை தாங்கி னார். இந்த புத்தக கண்காட் சியை எரிசக்தி மற்றும் சட்டத் துறை அமைச்சர் நிர்மல்குமார் தொடங்கி வைத்தார். கண் காட்சியில் 250-க்கும் மேற் பட்ட அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன.


மதுரை புத்தகத் திருவிழாவில், உயிர்மை பதிப்பகத்தின் சார்பில் ஐந்து எழுத்தாளர்களின் ஆறு புதிய நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

மதுரை புத்தகத் திருவிழாவில் ​ஒவ்வொரு ஆண்டும் முக்கியத்துவம் வாய்ந்த நூல்களை வெளியிட்டு வரும் உயிர்மை பதிப்பகம், இந்த ஆண்டும் இலக்கியம், இசை மற்றும் உளவியல் சார்ந்த ஆறு நூல்களை வெளிட்டது. ​கவிஞர் மனுஷ்ய புத்திரன் எழுதிய நேர்காணல் தொகுப்பான ‘உங்கள் மீது நீங்களே இரக்கம் காட்டவில்லையென்றால் இந்த உலகில் வேறு யார் காட்டுவார்கள்?’ நூலினை கவிஞர் கலாப்ரியா வெளியிட, கவிஞர் லிபி ஆரண்யா பெற்றுக் கொண்டார்.

இவ்விழாவில் நவீனா அமரன் வாழ்த்துரையும், கவிஞர் லிபி ஆரண்யா சிறப்புரையும் வழங்கினர்.
கவிஞர் கலாப்ரியா எழுதிய ‘மோட்ச தீபம்’ சிறுகதைத் தொகுப்பினை ந. முருகேச பாண்டியன் வெளியிட, எழுத்தாளர் சித்ரா சிவன் பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினார்.
​டாக்டர் சிவபாலன் இளங்கோவன் எழுதிய ஜென்சீ (Gen Z) தலைமுறையினர் குறித்த உளவியல் நூலான ‘தனித்திருக்கும் தலைமுறை: இன்ஸ்டா பெண்களும் சாட்பாட் ஆண்களும்’ நூலினை
முருகேச பாண்டியன் வெளியிட, நவீனா அமரன் பெற்றுக்கொண்டார். நூல் குறித்து ந. முருகேச பாண்டியன் உரையாற்றினார்.


​மதுரை எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ப.கவிதா குமார் எழுதிய ‘பக்தியிசை பரப்பிய பாவலர்கள்’ நூலினை கவிஞர் மனுஷ்ய புத்திரன் வெளியிட,ப. கபிலரசன் பெற்றுக்கொண்டு கருத்துரை வழங்கினார்.


​ப.கவிதா குமார் எழுதிய மற்றொரு நூலான ‘இளையராஜாவின் ரசிகன்’ நூலினை கவிஞர் ஆத்மார்த்தி வெளியிட, கவிஞர் லிபி ஆரண்யா பெற்றுக்கொண்டார். இப்புத்தகம் குறித்து ஆத்மார்த்தி கருத்துரை வழங்கினார்.


கவிஞர் பாலபாரதி எழுதிய ‘காற்றிலாடும் காகிதப் பூக்கள்’ கவிதைத் தொகுப்பினை கவிஞர் கலாப்ரியா வெளியிட, தீபா நாகராணி பெற்றுக்கொண்டு நூல் குறித்து கருத்துரை வழங்கினார். ​விழாவின் நிறைவாக நூலாசிரியர்கள் அனைவரும் ஏற்புரை வழங்கினர். கவிஞர் மனுஷ்ய புத்திரன் ஏற்புரையுடன் நன்றி கூறினார். இவ்விழாவில் எழுத்தாளர்கள், வாசகர்கள் மற்றும் இலக்கிய ஆர்வலர்கள் எனப் பலரும் திரளாகக் கலந்துகொண்டனர். புத்தக திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பபாசி தலைவர் சண்முகம் நிர்வாகிகள் புருஷோத்தமன் உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *