தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா சிலம்பு மண்டபத்தில் புதன்கிழமை உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளில் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் சேவைகள் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட நிலையிலான அலுவலர்கள் முற்பகல் மேற்கொண்ட கள் ஆய்வுகள் குறித்த மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி கேட்டறிந்ததுடன் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கினார்

இதனைத் தொடர்ந்து பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் பெற்றுக்கொண்டு மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுறுத்தினார்

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் ரா ரம்யா தேவி பெரியகுளம் சார் ஆட்சியர் தவலேந்து திட்ட இயக்குனர் ஊரக வளர்ச்சி முகமை துஷார் ஸ்ரீ ஹரி ஷிண்டே திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் வீராச்சாமி தனித் துணை ஆட்சியர் கவிதா சா.ப.தி செயற் பொறியாளர் வளர்ச்சி மீனாகுமாரி உதவி இயக்குனர் அண்ணா நூற்பாலை சம்பத்குமார் தாசில்தார் செந்தில்குமார் வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ. பாண்டி உதவி செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் போ. முத்துக்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *