தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் நடைபெற்ற உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் புதன்கிழமை ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ராஜதானி ஊராட்சி மன்ற அலுவலகத்தின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்

இந்த ஆய்வில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் ரொக்கப் பதிவேடு செலவீனப் பதிவேடு உள்ளிட்ட பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்து கிராம ஊராட்சியில் வீடுகளுக்கான குடிநீர் இணைப்புகள் குறித்தும் குடிநீர் விநியோக பணிகள் குறித்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.உடன் வட்டார வளர்ச்சி அலுவலர் ராகவன் ஊராட்சி செயலர் மற்றும் ஊராட்சி அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *