புதுச்சேரி மாநிலம், நெட்டப்பாக்கம் கொம்யூன், மொளப்பாக்கம் – குச்சிப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கற்பகவிநாயகர் திருக்கோயிலில், ஸ்ரீ ஹரிஹரசுதன் ஐயப்பன் சுவாமியின் 15ஆம் ஆண்டு உற்சவர் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு நடைபெற்ற இவ்விழாவில், ஐயப்பன் சுவாமியின் உற்சவர் திருமேனிக்கு சிறப்பு நெய் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்பன் சுவாமியை வழிபட்டனர்.
மேலும், விழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு ஐயப்பன் சுவாமி அலங்கரிக்கப்பட்ட திருவீதி உலா நடைபெற்றது. இதில் கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒற்றுமையுடன் 15ஆம் ஆண்டு உற்சவர் திருவிழாவை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்து நடத்தினர்.