மதுரை மீனாட்சி அம் மன் கோவிலில் கார்த் திகை திருவிழா கொடி யேற்றத்துடன் தொடங் கியது. 24-ந் தேதி லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத திரு விழா நேற்று தொடங்கி வரு கிற 27-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா கொடியேற்றத்தையொட்டி சுவாமி சன்னதி கொடிமரம் அருகே வேள்வி பூஜை நடந்தது. தொடர்ந்து கொடியேற்றம் நடந்தது. பூஜிக் கப்பட்ட புனிதநீரால்கொடி மரத்திற்கு சிறப்பு பூஜை நடை பெற்றது.
கொடிமரத்திற்கு முன்பு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். பின்னர் கொடிமரம், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராள மான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்த னர். திருவிழா நடைபெறும் 10 நாட்களும் மீனாட்சி, சுந்த ரேசுவரர் பஞ்ச மூர்த்திகளு டன் காலை, மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதி யில்வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவர்.
விழாவின் முக்கிய நாளான கார்த்திகை தினமான 24-ந் தேதி மாலை மீனாட்சி அம் மன் கோவில் முழுவதும் லட்ச தீபம் ஏற்றப்படும். அன்று இரவு 7 மணிக்கு மீனாட்சி-சுந்தரேசுவரர் பஞ் சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, கீழமாசி வீதி செல்வர்.தேரடி அருகில் சொக்கப் பனை ஏற்றப்படும். கார்த்திகை மாத திருவிழா நடைபெறும் நாட்களில் உபய தங்கரதம், உபய திருக்கல்யாணம் மற்றும் உபய வைரக்கிரீடம் ஆகியவை நடைபெ றாது என்று கோவில் நிர்வா கம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.