அரியலூரில் அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம்


அரியலூரில் பாரத முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி பிறந்த தினம் அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் சிறப்பாக கொண்டாடப்பட்டது அரியலூர் பஸ் நிலையம் அருகே உள்ள காந்தி காமராஜ் சிலைகளுக்கும் அன்னை இந்திரா காந்தி படத்திற்கும் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமையில் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் மாரியம்மாள் தலைமை தாங்கினார் பொதுக்குழு உறுப்பினர் எஸ் எம் சந்திரசேகர் முன்னிலை வகித்தார்

வட்டார தலைவர்கள் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தியாகராஜன் பாண்டியன் மாவட்ட செயலாளர் ஜனோபகாரா பிரஸ் செந்தில் மாவட்ட துணை தலைவர் கலைசெல்வன் மாவட்ட செயலாளர்கள் சந்திரகாசன் ஜோதி தகவல் தொடர்பு பிரிவு தலைவர் கௌதம் கண்ணன் வட்டார துணை தலைவர் ஜோதிலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் முன்னதாக மாவட்ட செயலாளர் மணக்கால் பழனிமுத்து காங்கிரஸ் கொடி ஏற்றி வைத்தார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *