கோயம்புத்தூரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரம்மாண்ட நகைக் கண்காட்சியான ஆசியா ஜுவல்ஸ் ஷோ 2026, அவினாசி சாலையில் உள்ள தி ரெசிடென்சி டவர்ஸ் ஹோட்டலில் இன்று கோலாகலமாகத் தொடங்கியது.
நவம்பர் 21 முதல் 23ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சி, ஆசியா ஜுவல்ஸ் ஷோவின் 62-வது பதிப்பாகும்.

இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னணி 50 நகை வடிவமைப்பாளர்கள் மற்றும் பிரபல நகை பிராண்டுகள் பங்கேற்று, தங்களின் பிரத்யேகமான மற்றும் தனித்துவமான நகை வடிவமைப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கண்காட்சியில் தங்க நகைகள், வைர நகைகள், பிளாட்டினம் நகைகள், பாரம்பரிய மற்றும் திருமண நகைகள், ஆன்டிக் நகைகள், விலைமதிப்புள்ள கற்கள் பதித்த நகைகள், குந்தன், ஜடாவ், போல்கி மற்றும் வெள்ளி நகைகள் என பல்வேறு வகையான நகைகளின் சமீபத்திய கலெக்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

வரவிருக்கும் திருமண மற்றும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் தங்களுக்குப் பிடித்தமான நகைகளை நேரில் பார்வையிட்டு வாங்கவும், முன்பதிவு செய்யவும் சிறந்த வாய்ப்பாக இந்தக் கண்காட்சி அமைந்துள்ளது.
தென்னிந்தியாவின் முன்னணி மற்றும் பிரத்தியேக நகைக் கண்காட்சிகளில் ஒன்றாக விளங்கும் ஆசியா ஜுவல்ஸ் ஷோவை, எச்ஆர்எஸ் மீடியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை நகை விரும்பிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பார்வையிட்டு பயன்பெறலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *