இங்கிலாந்தில் நடைபெறும் சர்வதேச சிறுவர் அழகுப் போட்டியின் இறுதிச்சுற்றுக்குத் தேர்வு செய்யப்பட்டு கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுவன் டைட்டஸ் சாதனை படைத்துள்ளார்.
ஏற்கனவே இந்தோனேசியாவில் நடைபெற்ற உலகக் குழந்தைகள் அழகுப் போட்டியில் பட்டம் வென்றுள்ள டைட்டஸ், வரும் நவம்பர் 27 முதல் 29 வரை இங்கிலாந்தின் பிரஸ்டன் நகரில் நடைபெறும் சர்வதேசப் போட்டியில் பங்கேற்க உள்ளார்.
அழகுப் போட்டி மட்டுமின்றி, சிலம்பம், டிரம்ஸ், கிட்டார் உள்ளிட்டவற்றிலும் ஆர்வம் கொண்ட இவர், மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான சிலம்பப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
கோவையில் உள்ள ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வரும் டைட்டஸ், கொச்சியில் உள்ள அதுல்ஸ் அகாடமியில் பயிற்சி பெற்று வருகிறார்.சர்வதேசப் போட்டியில் பங்கேற்கும் டைட்டஸ் இந்தியா, தமிழகம் மற்றும் கோவைக்கு பெருமை சேர்ப்பார் என அவரது பெற்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். சிறுவனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.