வளர்ந்து வரும் இரண்டாம் நிலை நகரங்களில் தொழில் வாய்ப்புகள் மற்றும் ஸ்டார்ட்அப் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், “Tier 2 Rising” என்ற தலைப்பில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில், மற்றவர்கள் தடைகளாகப் பார்க்கும் விஷயங்களிலும் வாய்ப்புகளைக் கண்டறிந்து முன்னேறுவது குறித்து சிறப்புரையாற்றப்பட்டது.
ஏராளமானோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சி, வளர்ந்து வரும் தொழில் முனைவோருக்கு புதிய சிந்தனைகளையும் வாய்ப்புகளையும் ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
தமிழகத்தில் வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் Startup TN சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த அரங்கில் புதிய தொழில்நுட்பங்கள், தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள், முதலீட்டுத் திட்டங்கள் மற்றும் இளம் தொழில் முனைவோருக்கான அரசு உதவித் திட்டங்கள் குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.மேலும், பல்வேறு நிறுவனங்களின் அரங்குகளை பொதுமக்களும் தொழில் முனைவோரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.
புதிய தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் இந்த முயற்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.நம்ம ஆபீஸ் நிறுவனத் தலைவர் செந்தில் ராஜா நிர்வாக இயக்குனர் மற்றும் செயல் தலைவர் குமரேஷ் பார்ச்சூன் சிட்டி நிர்வாக இயக்குனர்கள் டி பி குமார் செயல் இயக்குனர் பி ராஜசேகர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.