செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம்:
அச்சிறுப்பாக்கம் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பின் அவசியம் மற்றும் அதன் பயன்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் ஆலோசனையின்படியும், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வழங்கிய அறிவுறுத்தலின்படியும், அச்சிறுப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து வீடுகள், அரசு கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலும் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இக்கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர், மன்ற உறுப்பினர்கள், பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவன உரிமையாளர்களுக்கு மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதில் அதன் பங்கு மற்றும் மழைநீரை முறையாகச் சேமிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி செயல் அலுவலர் எஸ். சிவப்பிரகாஷ், பேரூராட்சித் தலைவர் நந்தினி கரிகாலன், மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் மற்றும் சிறு, குறு வியாபாரிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.