கோவை விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி பரிசளிப்பு விழா –சிறந்த ஓவியங்கள் வரைந்த குழந்தைகளுக்கு காவல் உதவி ஆணையர் பரிசுகள் வழங்கிப் பாராட்டு
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கோவை மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள விமன்ஸ் சென்டர் பை மதர்ஹூட் மருத்துவமனை சார்பில், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டி கடந்த 14 ஆம் தேதி நடத்தப்பட்டது.தொடர்ந்து நான்காவது ஆண்டாக நடைபெற்ற இப்போட்டியில் 3 முதல் 12 வயது வரையிலான 200-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது ஓவியத் திறமையை வெளிப்படுத்தினர்.
வயது அடிப்படையில் பல்வேறு தலைப்புகளில் நடைபெற்ற இப்போட்டியில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கான பரிசளிப்பு விழா மருத்துவமனை
கலையரங்கில் நடைபெற்றது.இதில்,மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட காவல் துறை உதவி ஆணையர் சரவணன், சிறந்த ஓவியங்களை வரைந்த குழந்தைகளுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.முதல் பரிசாக மூன்று பிரிவுகளிலும் சைக்கிள்கள், இரண்டாம் பரிசாக இசைக்கருவிகள், மூன்றாம் பரிசாக கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.மேலும், 10 குழந்தைகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் பேசிய உதவி ஆணையர் சரவணன், குழந்தைகளை வளர்ப்பதில் பெற்றோர்கள் மிகுந்த பொறுப்புடன் செயல்பட வேண்டும். சவால்கள் நிறைந்த இன்றைய உலகில் குழந்தைகள் எதிர்காலத்தில் வெற்றியாளர்களாக உருவாக பெற்றோரின் அன்பும், அக்கறையும், கவனிப்பும் அவசியம். அதே நேரத்தில் குழந்தைகளின் செயல்பாடுகளை முறையாகக் கண்காணிப்பதும் முக்கியம் எனத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் கவுரவ விருந்தினராக பிளாக் அண்ட் வைட் ஆர்ட் அகாடமி சுந்தர் ராஜ் கலந்து கொண்டார்.மேலும், பச்சிளம் குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சுனில், மருத்துவமனையின் பொது மேலாளர் ரெஜித் ராஜன் உள்ளிட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக உலக குறைமாதக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, விமன்ஸ் சென்டர் பை மதர்ஹுட் மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது
இதில், குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகளின் நலன், அவர்களுக்குத் தேவையான மருத்துவப் பராமரிப்பு மற்றும் பெற்றோருக்கு ஆதரவு அளிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது…