நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கம் சார்பாக உலக மானுட நாகரிக வரலாற்றில் முதன்மையானதும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டதுமான, 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழின நகர நாகரிகத்தின் அடையாளங்களை உலகிற்கு பறைசாற்றும் இடமாக கீழடி திகழ்கிறது.
அறம் சார்ந்த, அறிவார்ந்த சங்க கால மக்களின் வாழ்வியலையும், சங்க கால தமிழ் இலக்கியங்கள் வழி நம் முன்னோர்களின் சிறப்பையும் வெளிப்படுத்தும் கீழடி அகழாய்வு மற்றும் அருங்காட்சியகத்திற்கு நாச்சியார்கோவில் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் சுற்றுலா மேற்கொள்ளப்பட்டது. இந்த சுற்றுலா மிகவும் சிறப்பாக அமைந்தது.
இந்நிகழ்வை வடிவமைத்த மாவட்ட ஆளுநர் பி.எம்.ஜே.எஃப். லயன் விஜயலட்சுமி அவர்களுக்கும், திட்டமிட்டு செயல்படுத்திய நாச்சியார்கோயில் லயன் சங்கத்தின் மாவட்ட தலைவர் லயன் ராஜகோபால் அவர்களுக்கும், உறுதுணையாக உடனிருந்து உதவிய நாச்சியார்கோவில் அரிமா சங்க ஒருங்கிணைப்பாளர்கள் லயன் பாலமுருகன், லயன் அய்யப்பன் மற்றும் அரிமா தோழமைகள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் தெரிவிக்கப்பட்டது.