கோவா மாநிலம் மபுசாவில் நடைபெற்ற மூன்றாவது உலக தாய் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில், கோவை மாவட்ட வீரர்கள் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் என மூன்று பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளனர்.தாய் பாக்ஸிங் இந்தியன் ஃபெடரேஷன் சார்பில் நடைபெற்ற இப்போட்டியில், ஏழு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழகத்தைச் சேர்ந்த 37 மாணவ, மாணவிகள் மற்றும் மூன்று நடுவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் கோவையைச் சேர்ந்த டி.எஸ். அதிவ் தங்கப் பதக்கமும், அஜீஸ் ரகுமான் வெள்ளிப் பதக்கமும், பி. நேத்ரா வெண்கலப் பதக்கமும் வென்று நாட்டிற்கும் கோவைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.மேலும், கோவையைச் சேர்ந்த எஸ்.எம். சூர்யா பிரபு இப்போட்டியில் தேசிய நடுவராகப் பணியாற்றினார்.
பதக்கம் வென்ற வீரர்கள் மற்றும் தேசிய நடுவர் சூர்யா பிரபு ஆகியோருக்கு கோவை கணபதியில் மாவட்ட தாய் பாக்ஸிங் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாவட்டத் தலைவர் பி. அமிர்தராஜ், துணைச் செயலாளர் சிவராமச்சந்திரன், துணைத் தலைவர் ஜெயவர்த்தனவேல் மற்றும் பயிற்சியாளர்கள் வீரர்களைப் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.