கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் 23.11.2026 அன்று நடைபெற்றது.

தமிழ்நாடு அரசின் உத்தரவின்படி, பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணவும், கோரிக்கை மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசின் திட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் இக்கூட்டம் நடத்தப்படுகிறது.

இன்றைய கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 934 மனுக்கள் பெறப்பட்டன. அனைத்து மனுக்களும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு, தகுதியான மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க ஆட்சியர் அறிவுறுத்தினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கோ.புண்ணியகோட்டி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) தீபா, மாவட்ட வழங்கல் அலுவலர் தங்கமணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *