நாகப்பட்டினம்,நவ.23-
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருப்புகலூர் ஊராட்சி வவ்வாலடி கிராமத்தில் தோட்டக்கலை மலைப்பயிர் துறை சார்பில் மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுனை சீரமைப்பு திட்டம் 2026-27-ம் ஆண்டிற்கான செயல் விளக்கத்திடல் பயிற்சி மற்றும் தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் தோட்டத்தில் தேன் பூச்சி பெட்டி வைத்து வளர்ப்பதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.

தோட்டக்கலை உதவி இயக்குநர் முகமது சாதிக் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். தேனீ வளர்ப்பாளர் அனுராதா செயல் விளக்கம் காண்பித்தார். மேலும் தேனீ வளர்ப்பினால் விவசாயிகளுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்து உதவி தோட்டக்கலை அலுவலர்கள் செல்லபாண்டியன், ராஜவேல் ஆகியோர் திட்டங்கள் குறித்து பேசினர். இப்பயிற்சியில், அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *