மதுரை அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத் தில் இயேசுவின் திருஉடலை நற்கருணை வடிவில் முதன் முதலாகபெறும் குழந்தை களுக்கான புது நன்மை வழங்கும் விழா நடைபெற்றது.
பங்குத்தந்தை அருள்சேகர் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் இயேசு சபையை சேர்ந்த குருக்கள் குழந்தைகளுக்கு புது நன்மை வழங்கி ஆசி வழங்கினர். இதில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டு புது நன்மையை பெற்றனர்.