தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் அகராதியில் துறை, இறையகம் பதிப்பகம், ஆகிய இணைந்து நடத்தும் மறைமலையடிகள், தேவநேயப் பாவாணர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகிய தனித்தமிழ்இயக்கப் பற்றாளர்களின் வரிசையில் புலவர் இறைக்குருவனாரும் அவரது நினைவேந்தலுக்குப் பின் அவரது படைப்புகள் குறித்த கருத்தரங்கு பேரவைக்கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது ..
நிகழ்ச்சியை பாவலரேறு அவர்களின் பெயர்த்தியும் இறைக்குருவனாரின் மகளுமான அங்கயற்கண்ணி-திருமலை தமிழரசன் அவர்களது இறையகம் பதிப்பகமும் தமிழ்ப் பல்கலைக்கழக வளர்தமிழ்ப்புலத்தின் அகராதியியல் துறைத்தலைவர் செ.த.ஜாக்குலின் ஒருங்கிணைத்து நடத்தினர்.
இந்நிகழ்ச்சியை தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.தொடர்ந்து வளர்தமிழ்ப் புலத்தலைவர் குறிஞ்சிவேந்தன் வாழ்த்துரை ஆற்றினார்.. ஐந்து அமர்வுகளில் முறையே தமிழரண் மாணவர் அமைப்பு தஞ்சை மாவட்டச் செயலாளர், நான் ஓர் ஐஏஎஸ் அகாடமி நிறுவுநர் தமிழ்இயலன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவன சுவடியியல் புல இணைப் பேராசிரியர் தாமரைப்பாண்டியன் அவர்களும் காலை அமர்வில் சிறப்புரையாக சூலூர் பாவேந்தர் பேரவையின் நிறுவுநர் செந்தலை கவுதமன் சிறப்புச் சொற்பொழிவாற்றினார்.
பிற்பகல் அமர்வில் குறிஞ்சிவேந்தன் தலைமை தாங்கினார். இணைப்பேராசிரியர்கள் ஜாக்குலின் ,தியாகராஜன் ஆகியோர் வாழ்த்துரையாற்றினார்கள். புதுவை அருங்காட்சியக இயக்குனர் அறிவன், சென்னை பல்கலைக்கழக சைவ சித்தாந்தத் துறைத்தலைவர் நல்லூர் சரவணன் ஆகியோர் சிறப்புரையாக, மல்லைத் தமிழ்ச் சங்கத்தின் தலைவர் மல்லை சி.ஏ.சத்தியா சிறப்புரையாற்றினார்.இதில் சுற்றியுள்ள கல்லூரிகளைச் சேர்ந்த 350க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பங்கேற்றனர்