வலங்கைமான்,
திருவாரூர் கடந்த இரண்டு நாட்கள் இரவு பகலாக பெய்த கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டம் முழுவதும் சம்பா தாளடி நெற்பயிர்கள் மழைநீரில் முழ்கி சேதமடைந்து வருகின்றது.
அந்த வகையில் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட புலவர்நத்தம் , பாப்பாக்குடி , நார்த்தாங்குடி , நரிக்குடி , உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 5000 ஏக்கர் பரப்பளவில் கடந்த 25 நாட்களுக்கு முன்பு தாளடி நடவு பணிகள் நேரடி விதைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இத்தகைய தாளடி இளம் நடவு பயிர்கள் , நேரடி நெல் விதைப்பு களை தொடர்ந்து பெய்த கன மழையால் மூழ்கியது. நடவு செய்யப்பட்ட 20 நாட்களே ஆன இப்பயிர்களின் வேர்களை சூழ்ந்த மழைநீர் வடியாமல் தேங்கி நிற்பதால் வேர்கள் முழுவதும் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட பயிர் களை முழுமையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்க வேண்டும் இந்த ஆண்டு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்