திட்டச்சேரி,நவ.25-
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மகளிர் திட்டம் சார்பில் சிறு தானியம் மற்றும் பாரம்பரிய உணவு திருவிழா திருமருகல் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த உணவு திருவிழாவில் திருமருகல் வட்டாரத்தை சேர்ந்த மகளிர் சுய உதவிக் குழுவினர் தயார் செய்த 200-க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பாரம்பரிய அரிசி வகைகளில் செய்யப்பட்ட உணவுகள், சிறு தானியங்களில் செய்யப்பட்ட தோசை மற்றும் இட்லி வகைகள், தூதுவளை, பிரண்டை உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளில் செய்யப்பட்ட உணவுகள் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. உதவி திட்ட அலுவலர் வீராச்சாமி உணவுகளை சுவைத்து சிறப்பாக உணவு செய்தவர்களை பாராட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பாராட்டினார்.

சிறந்த உணவு வகைகள் தேர்வு செய்யப்பட்டு, முதல் பரிசு ரூ.4000, இரண்டாம் பரிசு ரூ. 3000, மூனறாம் பரிசு ரூ.2000 வழங்கப்பட்டது. இதில் வட்டார இயக்க மேலாளர் அண்ணாதுரை, வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.கார்த்திகா, ரவிச்சந்திரன், கார்த்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *