பெரியகுளம் நவ.26
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, தென்கைலாயம் என்று அழைக்கப்படும் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகேயுள்ள புகழ்பெற்ற கைலாசநாதர் திருக்கோவிலில் ஆன்மிக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்புக் குழுவின் சிறப்பு ஆலோசகர் ஜெயபிரதீப் சார்பில், திருவிழாவிற்கு வருகை தந்திருந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட சாதுக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் வழங்கப்பட்டன.
சாதுக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பயன்படும் வகையில் பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்புகள் தயார் செய்யப்பட்டு நேரில் வழங்கப்பட்டன. மேலும் திருவிழாவிற்கு வருகை தந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சிறப்பான முறையில் அன்னதானமும் வழங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு உணவருந்தினர்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் ஆன்மிக உணர்வையும், சேவை மனப்பான்மையையும் வெளிப்படுத்தும் வகையில் சாதுக்களுக்கு உதவிகள் வழங்கியும், பொதுமக்களுக்கு அன்னதானம் அளித்தும் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி பக்தர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிகழ்ச்சியில் கைலாசநாதர் திருக்கோவில் அன்பர் பணி செய்யும் பராமரிப்பு குழு செயலாளர் சிவக்குமார் மற்றும் குழுவினர் உடனிருந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.