கோவை கே.பி.ஆர்.தொழில் நுட்ப கல்லூரி வளாகத்தில் முக்கூடல் அறக்கட்டளை சார்பில், மாணவர்களின் அறிவியல் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் தொழில்நுட்பத் திறன்களை ஊக்குவிக்கும் வகையில் ‘உரம் இந்தியா’ (URAM INDIA) 5-வது பதிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது.

இராணுவத் தொழில்நுட்பம் (Military Tech) என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், கோவை மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 35-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களின் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

இப்போட்டியில் 3 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இளநிலைப் பிரிவு, 6 மற்றும் 7-ம் வகுப்பு மாணவர்களுக்கு மூத்தோர் பிரிவு, 8 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு உயர் மூத்தோர் பிரிவு என மூன்று பிரிவுகளாகப் போட்டிகள் நடத்தப்பட்டன.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (DRDO) விஞ்ஞானியும், இணை இயக்குநருமான டாக்டர் கே. கதிர்வேலு கலந்து கொண்டு மாணவர்களின் அறிவியல் படைப்புகளைப் பார்வையிட்டு சிறப்பித்தார்.

முதல் நாள் நடைபெற்ற போட்டியில் சுமார் 600 மாணவர்கள் பங்கேற்று 150-க்கும் மேற்பட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் திட்டங்களைச் சமர்ப்பித்தனர். இரண்டாவது நாள் நடைபெற்ற இளநிலை மற்றும் உயர் மூத்தோர் பிரிவுப் போட்டிகளில் சுமார் 800 மாணவர்கள் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர்.

இரண்டு நாட்களிலும் மொத்தம் 250-க்கும் மேற்பட்ட மாணவர் குழுக்கள் தங்களது படைப்புகளைச் சமர்ப்பித்து, இராணுவப் பயன்பாட்டுக்கான புதிய தொழில்நுட்பங்கள், பாதுகாப்பு சார்ந்த கண்டுபிடிப்புகள் மற்றும் அறிவியல் சார்ந்த தீர்வுகள் குறித்த தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

பள்ளிப் பருவத்திலேயே மாணவர்களிடம் அறிவியல் ஆர்வத்தையும், ஆராய்ச்சி மனப்பான்மையையும் வளர்ப்பதுடன், நாட்டின் பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் இந்த போட்டியை நடத்தியதாகவுல்,குறிப்பாக இதி போன்ற போட்டிகளில்,மாணவர்கள் பங்கேற்பதால் அவர்களின் மறைந்திருக்கும் அறிவியல் திறன்களை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு வாய்ப்பாக அமையும் என,ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர் தொடர்ந்து சிறந்த படைப்புகளைத் தேர்வு செய்து 60-க்கும் மேற்பட்ட விருதுகள் வழங்கப்பட்டன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *