எண்ணூரில் உடல்நிலை சரியில்லாத தாய் தந்தைக்கு மருத்துவம் பார்க்க கடன் வாங்கி கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட நபர்
நண்பருக்கு செல்போனில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொள்வதாக பேசிக்கொண்டே உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம்
எண்ணூர் அன்னை சிவகாமி நகர் 5 வது தெருவில் வசிப்பவர் போட்டோ மணி இவரது மகன் கோகுல் பிரசாத் வயது 31 தந்தை உடல்நிலை சரியில்லாத இருந்தபோது மருத்துவ செலவிற்கு கடன் வாங்கிய நிலையில் தந்தை உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த வருடம் உயிரிழந்த நிலையில் தற்போது தாயின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மேற்கொண்டு கடன் அதிகமாக வாங்கி உள்ளதாகவும் கடனை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்த காரணத்தினால் மன உளைச்சல் அடைந்து விரக்தியில் தனது நண்பர் அஜித் என்பவருக்கு செல்போன் மூலம் பேசிக்கொண்டு தான் உயிரை மாய்த்துக் கொள்வதாக தெரிவித்து எர்ணாவூர் கேட் அருகே ரயில் வருகிறது நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என பேசிக்கொண்டே ரயில் முன் பாய்ந்து ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்
இதனை அடுத்து எண்ணூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு கொருக்குப்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்