கோவையில் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் மற்றும் மவுண்ட் கார்மல் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி இணைந்து நடத்திய உலக சாதனை நிகழ்ச்சியில், 75 மாணவ, மாணவியர் வெறும் 40 நிமிடங்களில் ஆண்டின் 365 நாட்களில் கடைப்பிடிக்கப்படும் 365 சிறப்பு தினங்களையும் வரிசைப்படுத்தி உலக சாதனை படைத்தனர்.

மாணவர்களின் தன்னம்பிக்கை, நினைவாற்றல் மற்றும் தனித்திறன்களை மேம்படுத்தி, சிறு வயதிலேயே சாதனை முயற்சிகளில் ஈடுபட ஊக்குவிக்கும் வகையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சுமார் மூன்று வயது முதல் பள்ளி மாணவர்கள் வரை ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது அபார நினைவாற்றலையும் திறமையையும் வெளிப்படுத்தினர்.ஒரே அரங்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ஒவ்வொரு நாளுக்குமான சிறப்பு தினங்களை மாணவர்கள் எவ்விதத் தயக்கமுமின்றி வரிசையாக எடுத்துரைத்தனர்.

சிறு குழந்தைகள் இவ்வளவு குறுகிய நேரத்தில் 365 சிறப்பு தினங்களையும் நினைவில் வைத்து வரிசைப்படுத்தியதைக் கண்டு அங்கிருந்த பெற்றோர்கள் வியப்படைந்தனர்.

மழலைக் குழந்தைகள் மேடையில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தியபோது, அரங்கில் அமர்ந்திருந்த பெற்றோர்கள் கைகளைத் தட்டி உற்சாகப்படுத்தினர்.இறுதியில், 40 நிமிடங்களில் 365 சிறப்பு தினங்களை வரிசைப்படுத்தி உலக சாதனை படைத்த 75 மாணவ, மாணவியருக்கும் சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் சார்பில் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினர்களாக சோழன் உலக சாதனை புத்தகத்தின் நிறுவனர் டாக்டர் நிலவன்,பொதுச் செயலாளர் ஆதிரை மவுண்ட் கார்மல் மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியின் தாளாளர் சுகிதா ரோசலிண்ட், அறங்காவலர் வனிதா சோழன் உலக சாதனை புத்தகத்தின் மேலாளர் நீலமேகம், கோவை மாவட்ட தலைவர் பாலமுரளி கிருஷ்ணன், மாவட்ட செயலாளர் திலகவதி, ஏக்னஸ் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளியின் தாளாளர் சுரேஷ், பையோலிவ் மற்றும் டிஎன்ஏ ஹோட்டல்களின் செயல்பாடு மற்றும் விற்பனை இயக்குனர் பூர்ண சந்திரகுப்தா, யூகோ வங்கியின் பிரதான கிளை தலைமை மேலாளர் மற்றும் கிளை மேற்பார்வையாளர் ரஞ்சித் குமார் ஸ்ரீ டெக்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் ஸ்ரீ ராம் பிரபு ஜே. கே. டி. சி கலாச்சாரக்கூட நிறுவனர் சிறில் வினோத், மற்றும் யோகேஷ் நர்சரி பள்ளி மற்றும் தொடக்க பள்ளியின் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் கல்வியாளர்கள் ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டு மழலை குழந்தைகளின் இந்த முயற்சியை பாராட்டி வாழ்த்தினர்…

சிறு வயதிலேயே குழந்தைகளின் நினைவாற்றல், தன்னம்பிக்கை மற்றும் தனித்திறன்களை அடையாளம் கண்டு ஊக்குவித்தால் அவர்களாலும் பல்வேறு சாதனைகளைப் படைக்க முடியும் என்பதை இந்நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *