தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டி எஸ் யூ மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் விளையாட்டு திறன் மேம்பாட்டு பயிற்சித் திட்டத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான உடற்தகுதித் தேர்வு நடைபெற்றது கடந்த 23 ஆம் தேதி தொடங்கிய இந்த தேர்வு வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது இதனை தொடர்ந்து பயிற்சியில் பங்கேற்ற 5 ஆயிரம் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தாளாளர் எம் எஸ் பிரபாகர் தலைமை வகித்தார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் மாவட்ட விளையாட்டு அலுவலர் குபேந்திரன் டாக்டர் பேட்ரிக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்த நிகழ்ச்சியில் தேனி மாவட்ட ஆட்சியர் வ சிவ கிருஷ்ணமூர்த்தி கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா ஆகியோர் நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உடற் தகுதி தேர்வில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கினார்கள் இந்த

விழாவில் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா எம் எல் ஏ பேசியது

இந்திய அளவில் ஒரே கிராமத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் இடமாக கம்பம் தொகுதியில் உள்ள ராயப்பன்பட்டி திகழ்கிறது. இந்தக் கிராமத்தை கல்வி கிராமமாக மாற்றுவதற்கு தமிழக முதல்-அமைச்சர் ஜோசப் விஜய்யிடம் வலியுறுத்தியுள்ளேன்.

இதன் தொடக்கமாக ராயப்பன்பட்டியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செவிலியர் கல்லூரி, கம்பம் புதுப்பட்டியில் தொழிற்கல்வி கல்லூரி என மொத்தம் 3 கல்லூரிகள் அமைப்பதற்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் கம்பம் தொகுதி பின்தங்கிய நிலையில் இருந்தது. நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்று 200 நாட்களில் 3 கல்லூரிகளைக் கொண்டு வந்துள்ளேன்.

இன்னும் எண்ணற்ற வளர்ச்சிப் பணிகளை இந்த தொகுதி மக்களுக்காக செய்ய உள்ளேன்.

கிராமப்புற மாணவர்கள் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதற்காகத்தான் மாணவ, மாணவிகளுக்கு உடற் தகுதித் தேர்வு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்திய அளவில் பேசப்படும் வகையில் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி வாகை சூட வேண்டும். மாணவ மாணவிகள் விளையாட்டுப் போட்டிகளில் தீவிர ஆர்வம் செலுத்துவது போல் கல்வியிலும் சிறந்து நன்றாக படித்து தங்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள கல்வியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் பொதுவாக ஒரு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் எத்தனை சொத்து சேர்த்து வைத்தாலும் அது நிரந்தரமல்ல தாங்கள் கற்கும் கல்வியே தங்களுக்கு நிரந்தரமான சொத்து என்பதை உணர்ந்து படிப்பில் கவனம் செலுத்தி தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். இதற்காக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மாணவர்களாகிய உங்களுக்கு என்ன உதவி தேவைப்பட்டாலும் உடனடியாக எனது செல்போன் எண்ணில் மற்றும் கம்பம் நகரில் உள்ள எனது இல்லத்தில் உள்ள அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுக்க நான் தயாராக உள்ளேன்.என்றார்

நிகழ்ச்சியில் மாவட்ட கல்வித்துறை அலுவலர்கள், விளையாட்டுத்துறை அலுவலர்கள், வருவாய்த்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *