தாராபுரம் செய்தியாளர் பிரபு செல்:9715328420
குண்டடம்,
திருப்பூர் மாவட்டம் குண்டடம் பகுதியில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட்ட நிகழ்வை வரவேற்று பாரதிய ஜனதா கட்சியினர் கொண்டாடினர்.
இதன் ஒரு பகுதியாக, பாரதிய ஜனதா கட்சியின் குண்டடம் மேற்கு , கிழக்கு,ஒன்றியத் தலைவர்.கந்தசாமி, வெங்கடாசலம் அவர்கள் தலைமையில், மேட்டுக்கடை, குண்டடம் உள்ள விநாயகர் கோவிலில் தீபம் ஏற்றி, பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பாஜக மாநிலச் செயற்குழு உறுப்பினர் பொன். ருத்ரகுமார், மாநில இளைஞரணி துணைத் தலைவர் யோகேஸ்வரன் குண்டடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம். மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.