தஞ்சாவூர், நவ- 29.
தஞ்சாவூர் தி அக்சயா அகாடமி கேம்பஸ் பள்ளியில் அறிவியல் மற்றும் கலைக் கண்காட்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.பள்ளியின் செயலாளர்கள் மங்கள்ராம் மற்றும் காயத்ரி மங்கள்ராம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கண்காட்சியில், சிறப்பு விருந்தினராக சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் வேதியியல் மற்றும் உயிரித் தொழில்நுட்பப் பள்ளித் துறைத் தலைவர் டாக்டர் கே.எஸ். ராஜன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இக்கண்காட்சியில் மாணவர்கள் தங்களது அறிவியல் கண்டுபிடிப்புகள், புதுமையான படைப்புகள் மற்றும் கலைத்திறன்களைத் தத்ரூபமாகக் காட்சிப்படுத்தினர். கணிதத் துறையில் பேசும் ரோபோ, இயற்பியல் துறையில் சந்திரயான்-3 மாதிரி, வேதியியல் துறையில் எரிமலை மாதிரி, உயிரியல் துறையில் மனித உடலின் உள் உறுப்புகளின் செயல்பாடுகளை விளக்கும் மாதிரி ஆகியவை பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.


மேலும், தமிழ்த் துறையில் சோழ தேசத்தின் பெருமைகளைப் பறைசாற்றும் படைப்புகள், தியாகராஜ ஆராதனை உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இடம்பெற்றிருந்தன. இறுதியாக, பார்வையாளர்களை வியப்பிலும் பரபரப்பிலும் ஆழ்த்தும் வகையில் ஹாலோவீன் காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது.

இக்கண்காட்சிக்கான ஏற்பாடுகளைப் பள்ளி முதல்வர் டாக்டர் சந்திரசேகரன், பாடத்திட்டப் பொறுப்பாளர் குணசேகரன், துணை முதல்வர் சர்மிளா, மேலாளர் தினேஷ் ரெட்டி, ஒருங்கிணைப்பாளர்கள், விளையாட்டு ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் இணைந்து சிறப்பாகச் செய்திருந்தனர்.


மாணவர்களின் ஆர்வம், புதுமையான சிந்தனை, அறிவியல் தேடல் மற்றும் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் சிறந்த களமாக அமைந்த இக்கண்காட்சி பார்வையாளர்களின் பாராட்டுகளையும், பெரும் வரவேற்பையும் பெற்றது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *