திமுக இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை சி.ஐ.டி காலனி இல்லத்தில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி, உதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார். தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் திருவுருவப்படத்திற்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.